business

img

தேர்தல் முடிந்ததும் வேலையைக் காட்டியது மோடி அரசு..... பெட்ரோல் - டீசல் விலைகள் 18 காசுகள் வரை அதிகரிப்பு...

புதுதில்லி:
ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் வெளியான கையோடு, பெட்ரோல் - டீசல் விலையை மத்திய பாஜக அரசு மீண்டும் உயர்த்தத் துவங்கியுள்ளது.

அசாம், கேரளா, மேற்கு வங்கம், தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, கடந்த 2 மாதங்களாக பெட்ரோல் - டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலையை மோடி அரசு உயர்த்தவில்லை. விலையை உயர்த்தினால், தேர்தலில் வாக்கு கிடைக்காமல் போய்விடும் என்பதால், ஒரு தந்திரமாகவே தேர்தல் காலங்களில் எல்லாம்மோடி அரசு இவ்வாறு செய்து வருகிறது. தேர்தல் முடிந்ததும் வழக்கம் போல ஒன்றுக்குப் பத்தாக விலையை உயர்த்தி விடும்.

அந்த வகையிலேயே தற்போதும் 5 மாநிலத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மீண்டும் பெட்ரோல் விலையை லிட்டருக்கு 12 முதல் 15 காசுகள் வரையும், டீசல் விலையை லிட்டருக்கு 15 காசுகள் முதல் 18 காசுகள் வரையும் மோடி அரசு உயர்த்தியுள்ளது.இதனால் திங்களன்று ஒரு லிட்டர் பெட்ரோல் தில்லியில் 90 ரூபாய் 55 காசுகளாகவும், மும்பையில் 96 ரூபாய் 95 காசுகளாகவும், கொல்கத்தாவில் 90 ரூபாய் 76 காசுகளாகவும் சென்னையில் 93 ரூபாய் 67 காசுகளாகவும் பெங்களூருவில் 93 ரூபாய்67 காசுகளாகவும் உயர்ந்தது.கொரோனா பொதுமுடக்க தொழில் பாதிப்பால், உலக அளவில்கச்சா எண்ணெய்க்கான தேவைகுறைந்து, விலையும் வீழ்ச்சி அடைந்துவருகிறது. அப்படியிருந்தும் 2 மாதமாக விலையை உயர்த்தாததால், ஏற்பட்ட வருவாய் ‘இழப்பை’ ஈடுகட்டுகிறோம் என்று கூறி இந்த விலை உயர்வுசெய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த விலை உயர்வு தொடரும் என்றும் எண்ணெய் நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

;